இந்திய சினிமாவின் இசை உலகில் அடையாளமாக இருந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவர் புகழ்பெற்ற கர்நாடக பாடகி ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி கொண்ட பல மொழிகளில் பாடி அசத்தியிருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டு தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியும் இருக்கிறார். அதோடு ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே சேரும்.

இவரை இசையரசி, இசைப் பேரரசி, இசைக் குயில், இசை ராணி என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இப்படி புகழ்பெற்ற எம் எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல வருடங்களாக பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்த தகவல்:
இந்தப் படத்தை கெளதம் தின்னூரி இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெர்சி, மல்லி ராவா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க தேர்வு செய்ததற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்:
அதாவது, மேக்கப் அதிகம் இல்லாத எதார்த்தமான நடிப்பிற்கு பெயர் பெற்றவர் சாய் பல்லவி. இது எம் எஸ் அம்மா அவர்களுடைய எளிமையான தோற்றத்திற்கு பொருத்தமாக இருக்கும். அதோட சாய் பல்லவி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் அவரால் சிறப்பாக இந்த கதாபாத்திரத்திற்கு பிரதிபலிக்க முடியும். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் சரளமாக பேசக் கூடியவர்.
View this post on Instagram
சாய் பல்லவி நடிக்க காரணம்:
தற்போது சாய்பல்லவி பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் என்ற படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதை எடுத்து ஜூனை காணுடன் இணைந்து ஏக் தீன் என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தினுடைய பணிகள் முடிந்த பிறகு தான் இவர் எம்.எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கில் நடிக்க இருப்பதாக .கூறப்படுகிறது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






