தனது அம்மா மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்த புகைப்படம்.! அவங்க தங்கிச்சி தான் செமயா இருக்காங்க.!

0
793
Sai-pallavi

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் படு வைரலாக பரவியது.

நடிகை சாய் பல்லவி 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார் அதன் பின்னர் தனது பெற்றோர் விருப்பபடி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி 

கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்ட இவர், சினிமாவில் அறிமுகமானது இவரது நடனத்தின் மூலம் தான். 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

நடிகர், டான்சர், மருத்துவர் என்று இப்படிபட்ட சாய் பல்லவி பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தங்கை இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. சமீபத்தில் சாய் பல்லவி தனது தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.