நடிகை சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சாய்பல்லவி குறித்த தகவல்:
சமீப காலமாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், பாலிவுட் போன்ற பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்
சாய்பல்லவி தங்கை:
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தங்கையின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். அதற்குப் பின் இவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதோடு இவர் சாய்பல்லவி போல் சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சினிமாவில் இருந்து இவர் விலகிக்கொண்டார்.
பூஜா நிச்சயத்தார்தம்:
இருந்தாலும் பூஜா கண்ணன் தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு சில மாதங்களுக்கு வினீத் என்பவருடன் நிச்சயத்தார்தம் நடந்தது. மிக எளிமையாக தான் இவரின் நிச்சயத்தார்தம் நடந்தது. இந்நிலையில் இன்று சாய் பல்லவி தங்கை பூஜாவிற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.
பூஜா திருமணம்:
கோத்தகிரியில் படுகர் என முறைப்படி தான் பூஜாவிற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. தன்னுடைய தங்கையின் திருமணத்தில் சாய் பல்லவி முன்னின்று அனைத்தையும் செய்திருக்கிறார். தற்போது பூஜா-வினீத்தின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தின் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.