தன் மனைவி குறித்து ஆபாச ட்வீட் செய்த சித்தார்த்தார்த்துக்கு சாய்னாவின் கணவரின் பதில்.

0
814
siddharth
- Advertisement -

நடிகர் சித்தார்த்தின் டீவ்ட்டுக்கு பதில் கொடுத்த பேட்மிட்டன் பிளேயர் சாய்னா நேவாலின் கணவர் பருப்பள்ளி கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-
சாய்னா நேவாலுக்கு ஆபாச கமெண்ட் போட்ட நடிகர் சித்தார்த்.. நோட்டீஸ் அனுப்பிய  மகளிர் ஆணையம் | NCW sends notice to Actor Siddharth for his derogatory  tweet on Saina Nehwal - Tamil ...

சமீபத்தில் நடிகர் சித்தார்த் தமிழில் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது நடிகர் சித்தார்த் சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி உள்ளார்.

- Advertisement -

பிரதமர் குறித்து சாய்னா போட்ட ட்வீட் :

அந்த வகையில் ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையா? என பலரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்தார்கள். இதனைத்தொடர்ந்து சாய்னா ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது.

சித்தார்த் பதிவு

சித்தார்த் போட்ட பதில் டீவ்ட்:

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு வலுவான கண்டனம் செய்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் ட்விட்டரில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், உலகின் நுட்பமான சேவல் சாம்பியன் கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா என்று பதிலளித்திருந்தார். இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் குற்றம் சாட்டியும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

சித்தார்த் மீது புகார்:

மேலும், சித்தார்த் அளித்த பதிவிற்கு தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது குறித்து சாய்னா நேவாலின் கணவர் பருப்பள்ளி கஷ்யப் டீவ்ட் ஒன்று போட்டு உள்ளார்.

சாய்னா நேவாலின் கணவர் பருப்பள்ளி கஷ்யப் டீவ்ட்:

அதில் அவர் கூறியது, உங்கள் பதிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால், சிறந்த வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள். இப்படி சொல்வது அருமை என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் என்று கூறி கூறியிருந்தார். இப்படி சாய்னா நோவல் கணவர் பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement