நேற்று ஷெரினிடம் வழிந்த கவின்.! சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.!

0
26840
kavin-sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர். இதனால் கவின் மற்றும் லாஸ்லியா மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாக்க்ஷி சிறப்பு விருந்தினராக சென்ற போது கூட மீண்டும் கவின் மற்றும் லாஸ்லியா மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் என்பது தெளிவாகவே தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் மீண்டும் ரொமான்ஸ் செய்ய தொடங்கினார் கவின். ஆனால், லாஸ்லியா மிகவும் தெளிவாகவே இருந்தார். இதன் பின்னர் நேற்றய நிகழ்ச்சியில் லாஸ்லியாவை பேறுபெற்ற வேண்டும் என்பதற்காக ஷெரினிடம் நெருக்கமாக இருப்பது போல விளையாடிக்கொண்டிருந்தார் கவின்.

-விளம்பரம்-

இதனை கண்ட ரசிகர்கள் பலர், லாஸ்லியா முடியாது என்று சொன்னதும் கவின், ஷெரீனை டார்கட் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று கிண்டல் செய்ய துவங்கிவிட்டனர். இந்த நிலையில் ட்விட்டரில், கவின் மற்றும் சாக்க்ஷி பேசிய விடியோவை பகிர்ந்து ‘உங்கள் உணர்வு எங்களுக்கு பபுரிகிறது’ என்று கமன்ட் செய்திருந்தனர், இந்த பதிவை கண்ட சாக்க்ஷி, கடைசில இது மட்டும் தான் மிச்சமா இருந்தது என்று கமன்ட் செய்துள்ளார். மேலும், கவின் விஷயத்தில் நான் நிராகரிக்கபட்டதாக என்னவில்லை மாறாக காப்பற்றபட்டதாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement