சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள கலசபாக்கம் ஊரை சேர்ந்தவர். இவர் பிகாம், பிஎல், எம்எல் படிப்பை முடித்தவர். இவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கியிருந்தார்.

குறிப்பாக, ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான காலேஜ் டாட் காம் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கண்மணி என்ற டிவியில் மூலம் தான் இவர் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்.
சந்தியா நடித்த சீரியல்:
இந்த சீரியலில் இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையில் சந்தியா அவர்கள் முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க அரேஞ்ச் மேரேஜ் தான். முரளி கிருஷ்ணன் வேற யாரும் இல்லை மெட்டிஒலி சாந்தியின் மகன் தான். ஏற்கனவே சக்திவேல் தொடரில் மெட்டி ஒலி சாந்தியின் மருமகள் கதாபாத்திரத்தில் தான் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தியா குறித்த தகவல்:
தற்போது நிஜமாகவே இவர் சாந்தியின் மருமகளாகி இருக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் சந்தியா, சீரியல் நடித்துக் கொண்டு வந்தார். சமீபத்தில் தான் இந்த சீரியலினுடைய முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இது அடுத்து சமீபத்தில் தான் சக்திவேல் 2 சீரியலில் இருந்து சந்தியா விலகி இருந்தார்.
View this post on Instagram
சந்தியா வளைகாப்பு:
இவருக்கு பதில் சக்திவேல் 2 சீரியலில் நடிகை சஹானா நடித்து வருகிறார். சொந்த காரணத்தினால் தான் சீரியலை விட்டு சந்தியா விலகுவதாக கூறியிருந்தார். சமீபத்தில் நடிகை சந்தியா கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை சந்தியாவிற்கு வளைகாப்பு நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்தியாவிற்கு மிக சிறப்பாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.






