பொது மேடையில் நடிகையின் துப்பட்டாவில் வியர்வையை துடைத்த சல்மான் கான். வைரலாகும் வீடியோ.

0
5956
salmankhan
- Advertisement -

இந்தி நடிகரான சல்மான் கான் பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக திகழ்ந்து வந்தவர். இருப்பினும் இவருக்கு இருக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி சினிமாவின் மிக புகழ் வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவர் என்பதை நிலைநிறுத்தினார். இவர் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு “பீவி ஹோ தோ ஐசி” என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப் படமான மைனே பியார் கியா திரைப் படத்தில் தான் அவர் முதன் முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

-விளம்பரம்-
Image result for salman khan sonam kapoor

- Advertisement -

அப்படம் வர்த்தரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது. சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் “தபாங் 3” என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. நடிகர் சல்மான் கான் அவர்கள் தனது சகோதரர் அர்பாஸ் கான் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா, கன்னட நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : அவர் படத்துல background- ல நடிச்சா கூட போதும். யாஷிகா ஆனந்த் ஓபன் பேட்டி.

-விளம்பரம்-

மான் சுட்ட வழக்கில் இருந்து ஐஸ்வர்யா ராய் காதல் வரை சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அதே போல சல்மான் இத்தனை வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருந்து வருகிறார். ஆனால், இவருடன் நடிக்க இன்னும் பல்வேறு நடிகைகள் ஏங்கி கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான சோனம் கபூரின் துப்பட்டாவில் சல்மான் கான் பொது மேடையில் முகம் துடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகையான சோனம் கபூர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மேலும், இவர் ஏற்கனவே சல்மான் கான் நடித்த சாவரியா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் பொது மேடையில் நடிகை சோனம் கபூரின் துப்பட்டாவை எடுத்து முகம் துடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை இருப்பினும் திடீரென்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Advertisement