பிக் பாஸ் நடிகரை அடித்தால் 2 லட்சம் பரிசு! இந்து அமைப்பினர் பரபரப்பு தகவல்.! யார் தெரியுமா

0
550
bigg-boss

பிரபல இந்தி பிக் பாஸ் நடிகரான சல்மான் கானை அடித்து உதைப்பவர்களுக்கு 2 லட்சம் ருபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளது , பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சல்மான் கானின் ரசிகர்கள் பெரும் கடுப்பில் இருக்கின்றனர்.

salman-khan-bigg-boss

தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டாவது சீசனை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் இந்தியில் தான் தொடங்கியது. தற்போது இந்தியில் 10 சீசனை கடந்து சென்றுள்ள இந்த நிகழ்ச்சியை 10 சீசன்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதர்காக நடிகர் சல்மான் கான் பல்வேறு எதிர்ப்புகளை சம்பாதித்து வந்தார், இந்நிலையில் நடிகர் சல்மான் கான் “லவ் ராத்திரி” என்ற படத்தை தயாரித்து உள்ளார். அபிராஜ் மினாவால் இயக்கியுள்ள இந்த படத்தை வரும் நவராத்திரி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

salman khan

loveratri-poster

ஆனால், இந்துக்கள் புனிதமாக கருதும் நவராத்திரி பண்டிகை அன்று “லவ் ராத்திரி ” என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டு இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டதாக, சல்மான் கான் மீது இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த படத்தை தயாரித்துள்ள பிக் பாஸ் நடிகர் சல்மான் கானை அடித்து உதைப்பவர்களுக்கு 2 லட்ச ருபாய் பரிசும் வழங்கப்படும் என்றும் இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.