பாம்பு கடித்த பின் சல்மான் எப்படி இருக்கார் – மருத்துவமனையில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
291
Salman
- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை பாம்பு கடித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் நலம் விசாரித்து வருகிறார்கள். பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ ஐசி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார்.

-விளம்பரம்-
Salman Khan FARM HOUSE at Panvel | Arpita Farms | National Live News -  YouTube

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இப்படி இருந்தாலும் 2002ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. அதிலிருந்து மீண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சல்மான் கானின் பண்ணை வீடு :

அதுமட்டுமில்லாமல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பிரமாதமாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் தன்னுடைய ஓய்வு நாட்களை சுவாரசியமாக கழித்து வருவார். அதனால் மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வெல் என்ற இடத்தில் இவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது.

Salman Khan's Panvel farmhouse affected by cyclone Nisarga | Bollywood News  – India TV

சல்மான் கானை கடித்த பாம்பு :

கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டு தான் இவர் விவசாய பணிகளை செய்திருந்தார். மேலும், இது தொடர்பான வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணிக்கு பண்ணை வீட்டில் சல்மான் கானை பாம்பு கடித்தது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விசமில்லா பாம்பு :

பின் அவருக்கு விஷ முறிவு மருந்தை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்திருந்தார்கள் மருத்துவர்கள். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சல்மான்கானை கடித்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒருவேளை அதிக விஷம் கொண்ட பாம்பு கடித்திருந்தால் நிலைமை விபரீதமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம் :

பின் சிகிச்சைக்கு பிறகு சல்மான் கான் வீடு திரும்பினார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பத்திரமாக, கவனமாக இருங்கள் என்று கமெண்ட்களையும் போட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் சல்மான் கான் மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வைரலாக பரவி வருகிறது.

Advertisement