விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் – ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

0
803
samantha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது.இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தாலும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகின்றனர். ஆனால், சமந்தா மட்டும் தற்போது வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தின் எந்த கொண்டாடத்திலும் கலந்துகொள்ளவில்லை.

- Advertisement -

நயனை ஓரம்கட்டிய சாம் :

இந்த படம் வெளியான முதலே எல்லோரும், சமந்தா பீவர் பிடிப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தா தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், காத்துவாகுல ரெண்டு காதல் படத்துக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி தெரிவித்த சமந்தா :

உங்களது வரவேற்பை நான் நேரில் இருந்து பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களின் வரவேற்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. உங்களின் அன்புக்கு  மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடித்துள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ரசிகர்களை கவர்ந்தாலும் விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக உடல் எடையை குறைக்காமல் அப்படியே தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதிக்கு பதில் சிம்புவா :

என்னதான் சிறந்த நடிப்பை வைத்து சமாளித்து வந்தாலும் விஜய் சேதுபதி கொஞ்சமாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் அட்வைஸ்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு பதில் சிம்பு நடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறி வந்தனர்.

சமந்தா சொன்ன பதில் :

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ‘பலரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்து இருந்தார் நல்ல இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.ஆனால், உண்மை என்னவெனில் விஜய் சேதுபதி இல்லை என்றால் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருக்க மாட்டார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சமந்தாவும் உண்மை என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சிம்புவே இந்த படத்தில் நடித்து இருந்தாலும் சமந்தா இந்த படத்தில் நடித்து இருக்க மாட்டார் என்றே உறுதியாகி இருக்கிறது.

Advertisement