அப்போது நான் தெரியாமல் செய்த தவறு அது – ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்

0
320
- Advertisement -

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலளித்திருக்கும் செய்தி தான் இணையத்தில் பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்த ‘யசோதா’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ படத்தில் சமந்தா நடித்து இருந்தார். காதல் ஆக்சன் பாணியில் உருவான அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்து இருந்தது. இதனுடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

- Advertisement -

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒரு புறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

மயோசைட்டிஸ் :

இது ஒரு வகையான தசை அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா, நீண்ட ஓய்விற்குப் பிறகு கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவர் நடித்திருந்த ‘குஷி’ படம் ஓரளவுக்கு நல்லா வரவேற்பை பெற்றிருந்தது. அதை அடுத்து ஆங்கில வெப் சீரியஸான ‘Citadel’ இன் ஹிந்தி வெர்ஷனில் நடித்திருந்தார். பிறகு சிறிது காலத்திற்கு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாக கூறி இருந்தார். தற்போது ஓய்வில் இருந்து திரும்பி வந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ரசிகரின் கேள்வி:

நடிகை சமந்தா பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிடுவது, போட்டோக்களை பகிர்வது என்று படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆரோக்கியம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் ரசிகர் ஒருவர், ‘ இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? ‘ என்று சமந்தா விடம் கேள்வி கேட்டு இருக்கிறார்.

சமந்தாவின் பதில்:

அதற்கு பதில் அளித்த சமந்தா, ‘ இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் நான் தெரியாமல் செய்த தவறுகள். இப்போது உண்மை தெரிந்தவுடன் அது போன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நான் முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். மேலும், எச்.வினோத் இயக்கத்தில் விஜயின் 69 வது படத்தில் சமந்தா இணைகிறார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement