70 வயது பாட்டியாக ,மாறிய சமந்தா..!

0
437
Samantha

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. தற்போது இவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘சீம ராஜா, யூ டர்ன், சூப்பர் டீலக்ஸ்’ போன்ற மூன்று தமிழ் படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது.

miss-granny

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிராணி ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் அந்த படத்தை போன்று தமிழ் மற்றும் தெலுகு மொழியிலும் ஒரு படம் தயாராக இருப்பதாகவும், அந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு 70 வயது முதியவர் கதாபத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. தற்போது இவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘யூடர்ன்’ படமும் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் ஒரு கதையாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.