போலீஸ் உடையில் பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா – எப்படியோ அவர் ஆசை பாதி நிறைவெறிடிச்சி.

0
281
samantha
- Advertisement -

போலீஸ் உடையில் பாலிவுட் நடிகருடன் சமந்தா இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Samantha

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இருந்தாலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. மேலும், சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

சமந்தா நடிக்கும் படம்:

சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார். இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா, திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் உடன் சமந்தா இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தா அவர்கள் தற்போது புதிய விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

சமந்தா-ரன்வீர் சிங்:

அதுவும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த விளம்பர படப்பிடிப்பில் இருந்து போலீஸ் உடையுடன் ரன்வீர் சிங், நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் சமந்தா பாலிவுட்டில் ரன்வீர் கபூர் படத்தின் மூலம் தான் அறிமுக வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement