சமந்தா மற்றும் நாக சைதன்யாவை ஒன்றிணைக்க பிரபல இயக்குனர் பல முயற்சிகளை எடுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்பவர்கள் சமந்தா-நாக சைதன்யா. அதிலும் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். திருமணத்திற்கு இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது.
சமந்தா – நாகா சைதன்யா பிரிவு:
பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். பிறகு இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார். காதல் திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்களே ஆன நிலையில் இவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
சமந்தா நடிக்கும் படங்கள்:
இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது சமந்தா அவர்கள் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், யசோதா, சாகுந்தலம் போன்ற பல படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நாகசைதன்யா- சமந்தா மீண்டும் இணைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பதாக விவாகரத்துக்கு முன்பே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
நாகசைதன்யா- சமந்தா நடிக்க இருந்த படம்:
ஆனால், தற்போது இந்த விவகாரத்தால் சிக்கல் வந்திருக்கிறது. ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டியின் அடுத்த படத்தில் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருந்தது. மேலும், ஓ பேபி படத்தின் பாதியில் ஷூட்டிங் நேரத்திலேயே அந்த கதையை இயக்குனர் இருவரிடமும் கூறி ஒப்புதல் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரிந்து விட்டதால் இந்த படத்தில் ஒன்றாக நடிக்க முடியாது என மறுத்து விட்டதாக டோலிவுட் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது.
புது படத்தில் இயக்குனர் எடுத்த முடிவு:
அதனால் நந்தினி ரெட்டி நாக சைதன்யாவை நடிக்க வைத்து சமந்தாவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் ஏற்கனவே இருவரிடமும் பேசி ஒன்றாக நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாராம். அதிலும் இவர் சமந்தாவுக்கு மிக நெருக்கமான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிறந்தநாளுக்கு சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.