விவாகரத்துக்கு பின் ஒரே இடத்திற்கு வந்துள்ள நாக சைத்னயா – சமந்தா. இருவரும் என்ன செய்துள்ளார்கள் பாருங்க.

0
597
samantha
- Advertisement -

விவாகரத்துக்கு பின்னர் ஒன்றாக ஒரே இடத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா வந்ததாகவும் அவர்கள் நேரில் சந்தித்து கொண்டதாகவும் செய்திகள் பரவி வரும் நிலையில் அதை பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர்.

- Advertisement -

சமந்தா சந்தித்த சர்ச்சைகள் :

இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார். அதே போல விவகாரத்துக்கு கொஞ்சம் மாதங்கள் முன்பு தான் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா. ஆனால், விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

ஒரே இடத்திற்கு வந்துள்ள நாக சைதன்யா – சமந்தா :

இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நாக சைத்னயா – சமந்தா இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளனர். Ramanaidu Studio-வில் அவர்கள் இருவரும் படத்தின் ஷூட்டிங்கில் காணப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் ஒரே லொகேஷனில் இருந்தாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், ஷூட்டிங் முடிந்தபின் அவர்கள் தங்களின் காரில் ஏறி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  

-விளம்பரம்-

குடும்ப கெளரவம் குறித்து நாக சைதன்யா :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “நான் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கவுரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருகிறார்.

Samantha's dance number 'Pushpa' lands in legal trouble, case filed against  'Oo Antava' | Regional News | Zee News

விவகாரத்துக்கு காரணம் இதுவா :

திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நாக சைதன்யா கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு… தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல விவாகரத்துக்கு பின்னர் சமந்தா முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலில் கூட நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement