Myositis நோயால் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு – போட்டோ எடுத்த போது சமந்தா வைத்த வேண்டுகோள்.

0
295
Samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.சமீப காலமாக தெலுகு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

-விளம்பரம்-

அதற்காக சிகிச்சை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதற்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. நடிகை சமந்தா உடல்நிலை சரியில்லாத போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்த வருகிறார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால், அந்த வலியுடன் தான் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார் சமந்தா. அப்போது வெளியான புகைப்படங்களை கண்டு சமந்தாவின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சமந்தா ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருகிறார் சமந்தா.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது புகைப்பட கலைஞர்கள் சமந்தாவை புகைப்படம் எடுக்க முயன்ற போது flash இல்லாமல் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

சமந்தா இப்படி சொன்னதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா ‘மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக எனது உடல்நிலை மோசமாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால் என்னுடைய தசைகள் பயங்கர வலியை கொடுத்தன. எலும்புகள் பலவீனமாகி நான் சோர்ந்துவிட்டேன். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்தது. இந்த தலைவலியால் எந்த செயலையும் செய்ய முடியாது.

நான் வேடிக்கைக்காகவும் ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவதில்லை, வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிக்கிறது. எனக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி உள்ளது, மேலும் என் கண்களில் கடுமையான வலி உள்ளது, அவை வலியால் வீங்குகின்றன, வெளிச்சத்தை கண்டாலே என் கண்கள் கூசும் கடந்த 8 மாதங்களாக இதுவே உள்ளது. இது அநேகமாக ஒரு நடிகருக்கு நடக்கும் மோசமான விஷயம் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement