விவாகரத்து பின் தன் முன்னாள் கணவர் புகைப்படத்தை பதிவிட்டு சமந்தா போட்ட பதிவு – என்ன விஷயம் பாருங்க.

0
536
samantha
- Advertisement -

நாக சைதன்யாவின் மூன்று வருட பட வெற்றியை கொண்டாடி சமந்தா பதிவிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக இருவரும் கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம்.

samantha

சமந்தா நடிக்கும் படங்கள்:

-விளம்பரம்-

இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார்.

சமந்தா-நாக சைதன்யா நடித்த படம்:

இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தன்னுடைய கணவன் நாக சைதன்யாவின் மூன்று வருட வெற்றியை கொண்டாடி இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்த படம் மஜ்ஜலி. இந்த படம் தெலுங்கில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளிவந்தது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்து இருந்தது.

சமந்தாவின் இன்ஸ்டா பதிவு:

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆனதை அடுத்து சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி பதிவு செய்துள்ளார். இப்படி சமந்தாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவருடன் நடித்த படத்தின் வெற்றியை சமந்தா கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்கள் இருவரும் சேர்வார்களா? சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கமென்ட்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement