கர்ப்பமாக இருக்கும் காஜலுக்கு சமந்தா போட்ட கமன்ட், சமந்தாவின் ரசிகர்கள் ஏக்கத்துடன் போட்ட கமெண்ட்ஸ். ஏன் பாருங்க.

0
599
kajal
- Advertisement -

கர்ப்பமாக இருப்பது குறித்து காஜல் வெளியிட்ட விளம்பர வீடியோவில் சமந்தா செய்த கமன்ட் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது.

-விளம்பரம்-

காஜல் திருமணம் :

இவர்கள் திருமணம் 4, 5 நாட்கள் கொண்டாட்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். தற்போது காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சமீப காலமாக காஜல் அகர்வால் பதிவிடும் புகைப்படங்களில் அவரது வயறு கொஞ்சம் பெரிதாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு வந்தனர்.

- Advertisement -

கர்ப்பமாக இருக்கும் காஜல் :

இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று இன்ஸ்டாக்ராமில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார். அதே போல காஜல் அகர்வாலும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் காஜல். அதில் அவரது கர்ப்பம் தெளிவாக தெரியும் வகையில் போஸ் கொடுத்து இருந்தார்.

வாழ்த்து சொன்ன சமந்தா :

இந்த நிலையில் முதல் முறையாக தான் கர்ப்பமாக இருப்பதை குறித்து கர்ப சோதனை செய்யும் Kit விளம்பர வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் காஜல். அதில் இந்த ஆண்டு எனது குழந்தையை சந்திப்பதில் ஆர்வமுடன் இருக்கிறேன், இந்த மகிழ்ச்சியை என்னால் விரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார். காஜலின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை சமந்தா, காஜலின் இந்த பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் ‘ஐயோ, குயூட்டி, நீ மிகவும் பொலிவுடன் இருக்கிறாய், நானும் காத்துகொண்டு இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ரசிகர்களின் கமெண்ட்ஸ் :

சமந்தாவின் இந்த பதிவிற்கு காஜலும் நன்றி தெரிவித்து இருக்கிறார். ஆனால், ரசிகர்கள் பலர் நீங்களும் இப்படி ஒரு விஷயத்தை சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தோம் சமந்தா என்று கமன்ட் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நாக சைதன்வை விவரகரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், இவர்களின் விவாகரத்து குறித்து பல சினிமா பிரபங்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா இந்த ஆண்டு இறுதியில் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருந்தார் என்று ஒரு அதிர்ச்சி தகவலைஅறிவித்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is shaak-1024x569.jpg

குழந்தை பெற்றுகொள்ள திட்டமிட்டுருந்த சமந்தா :

இது குறித்து அவர் கடந்த ஆண்டு பேட்டியில் கூறியது, சகுந்தலம் படத்திற்காக நானும் என்னுடைய தந்தை குணசேகரும் சமந்தாவை சந்தித்தோம். அவருக்கு சகுந்தலம் படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது.ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று எங்களிடம் கேட்டார்.நான் ஏன் என்று கேட்டதற்கு சமந்தா அவர்கள் நாங்கள் இந்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். தாயாக விரும்புவதற்கு தான் முன்னுரிமை நான் அளிப்பேன். குழந்தை பிறந்தால் அது தான் என் உலகம் ஆக இருக்கும் என்று சமந்தா கூறியதாக நீலிமா தெரிவித்து இருந்தார்.

Advertisement