65 கோடி பட்ஜெட், 10 கோடிக்கும் குறைவான வசூல் – சாகுந்தலம் வசூல் குறித்த விமர்சனங்களுக்கு சமஸ்கிருத வரிகள் மூலம் சூசக பதில் அளித்த சமந்தா.

0
584
Sakunthalam
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதேபோல் சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோய் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இதனை அடுத்து தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம்.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திரைப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், 4 நாட்கள் முடிவில் படம் வெறும் ரூ.6.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல 6 ஆம் நாளில் இந்த படம் வெறும் 60 லட்சம் மட்டுமே வசூலித்து படக்குழுவுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

சாகுந்தலம் படத்தின் தோல்வியால் சமந்தா மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும் சிறிது நாள் தனது செல்போனை கூட அணைத்து வைத்து இருந்ததாகவும் பலர் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சாகுந்தலம் படத்தின் வசூல் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சுசகமான பதவி ஒன்றை போட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் ‘உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்தால் மட்டும் போதும். அந்த வேலைக்கு பலன் வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்று குறிப்பிடுவது போல சமஸ்கிருத வரிகளை பதிவிட்டுள்ளார் சமந்தா. இந்த பதிவை பார்த்த பலர் சாகுந்தலம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சமந்தா இப்படி பதிவிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement