ஜீவாவிற்காக சாட்சி கையெழுத்து போட்ட முத்து, பணம் வந்ததை மறைத்த மனோஜ். முத்து கேட்ட சரியான கேள்வி.

0
516
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தற்போது சென்றுகொண்டு இருக்கும் கதையின் படி சிறையில் இருக்கும் ரோகினியின் தந்தை வெளியில் வர நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் என 48 நாள் தரையில பாய போட்டு படுக்கனும், ஒரு நேரம் சாப்பிட வேண்டும் விஜயா கூறுகிறார். இதனால் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கே விஜயா பரிகாரங்கள் செய்ய வைக்கிறார்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் துவங்கி கனடாவில் இருந்து சென்னை வந்துள்ள ஜீவா முத்துவின் காரிலேயே பயணித்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்து ஜீவாவிடம் சொல்லி கோயிலுக்கு செல்கிறார். அப்போது ஜீவா காரிலேயே இருக்கிறார். பின்னர் மனோஜ் போன் வர, கோவிலுக்கு வெளியில் வந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை கண்ட ஜீவா, அதிர்ச்சியடைந்து தனது முகத்தை மூடிக்கொண்டு மறைகிறார். ஆனாலும் தனது வரை மனோஜ், ஜீவாவை பார்க்கவில்லை. இறுதியில் முத்து வந்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஜீவா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மேலும், மனோஜின் மனைவி ரோகினியின் பார்லர் என்று தெரியாமல் ஜீவா சென்று இருக்கிறார். அவரை கண்ட ரோகினி, உடனே மனோஜிற்கு போன் செய்கிறார். இதனை கேட்ட மனோஜ் ஒருகணம் அதிர்ச்சி அடைந்து உடனே பார்லருக்கு புறப்படுகிறார். அங்கே சென்ற மனோஜ், ஜீவாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ஜீவாவை மடக்கி வைத்து ‘திருடி உனக்கு என்னடி மரியாதை, பணத்தை கொடு என்று வெளுத்து வாங்குகிறார் ரோகினி.

சீரியல் கதை:

இதனை தொடர்ந்து பணத்தை ஏமார்ந்து இத்தனை நாட்களாக ஜீவா மீது கொலவெறியில் இருந்த மனோஜ், நீயெல்லாம் ஒரு பொண்ணா, உன்னை எல்லாம் சும்மா விட கூடாது என்று ஜீவாவின் கழுத்தை நெரித்தார். பின்னர் அவரை ரோகினி சமாதானம் செய்தார். பின்னர் பணத்தை கேட்டதற்கு 6 மாசம் என்னுடன் வாழ்ந்ததற்கு சரியா போச்சி என்று திமிராக பேசுகிறார் ஜீவா. பின்னர் மனோஜ் போலீசுக்கு போன் செய்கிறார். போலீஸ் வந்து அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர். மேலும், நேற்று எபிசோட்டில், போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ்- ரோகினி ஜீவா மீது புகார் கொடுக்கிறார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

போலீசும் ஜீவாவிடம் பணத்தை கொடுக்க வேண்டும் கேட்கிறார்கள். ஆனால், ஜீவா கொடுக்க முடியாது என்று தன்னுடைய லாயரை வைத்து பேசுகிறார். கடைசியில் போலீஸ், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்வேன். நீங்கள் அனைவரிடம் பேசி முடிவெடுங்கள் என்று சொன்னவுடன் பயம் வந்து விடுகிறது. இன்னொரு பக்கம் வண்டியை மீட்க முத்து-மீனா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அப்போது தெரிந்த போலீஸ் மூலம் பணம் கட்டி வண்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரோமோவில், எப்படியோ ஜீவாவிடம் பேசி மனோஜ்- ரோகிணி பணத்தை வாங்கி விடுகிறார்கள். இதை தெரியாமல் ஜீவாவிற்கு சாட்சி கையெழுத்து முத்து போட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பணம் வாங்கிய விஷயத்தை மனோஜ் மறைக்கிறார். பின் தான் கனடாவிற்கு செல்ல 15 லட்சம் தயார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு முத்து, உனக்கு பணம் யார் கொடுத்தது? ரோகிணியின் அப்பாவா? என்று கேட்டவுடன் ரோகிணியும் மனோஜும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் மனோஜூக்கு பணம் கிடைத்த விஷயம் முத்து குடும்பத்திற்கு தெரிய வருமா? முத்து இதை கண்டுபிடிப்பாரா? மனோஜ் கனடா வேலைக்கு செல்வாரா? போன்ற பல அதிரடித் திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement