தன் மாமனார் குறித்த டீவீட்டை டெலீட் செய்து, விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா.

0
24801
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

மேலும், திருமணத்துக்கு பின்னரும் சமந்தா அவர்கள் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சமந்தா அவர்கள் ட்விட்டரில் தன் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி தன் பெயருக்கு பின் இருந்து நீக்கி விட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றியுள்ளார். இதுகுறித்து தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தனது தந்தையின் நினைவு நாளை ஒட்டி நடிகர் நாகர்ஜுனா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை சமந்தா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். பின் திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா ‘மிகவும் அழகாக இருக்கிறது மாமா’ என குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த ட்விட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமந்தா குறித்து வந்த பல சர்ச்சைகளுக்கு இந்த ட்விட் சரியான பதிலடியாக இருக்கும். தற்போது நடிகை சமந்தா அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

-விளம்பரம்-
Advertisement