சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா, நாக சைதன்யா குறித்த விவாகரத்து செய்திகள் தான் பயங்கரமாக பரவி வந்து கொண்டிருக்கின்றது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே இவர்களைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன என்று சொல்லலாம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒருவர். ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், சமீப காலமாகவே சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிக்கிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற பல சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்றவாறு அவர்களுடைய சூழ்நிலையும் அமைகின்றது. சமீபத்தில் நடிகை சமந்தா ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை S என்று மத்தினார்.
இதையும் பாருங்க : ஆர்வக்கோளார்ல இப்படி பண்ண கடும் நடவடிக்கை – ரசிகர்களுக்கு விஜய் வார்னிங்.
அதில் இருந்து தான் சமந்தாவின் விவாகரத்து பற்றிய பல்வேறு விதமான வதந்திகள் கிளம்பியது. ஹைதராபாத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் நடிகர் ஆமீர் கானுக்கு விருந்து அளித்தனர். அந்த விருந்தில் நாகர்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய்பல்லவி என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த விருந்தில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.
எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல் ஊடகங்களுக்கு இந்த செய்தி அமைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.