இத பத்தி சைதன்யா வாய் திறந்து இருக்கலாம் – சமந்தாவுடன் கள்ள தொடர்பு சர்ச்சை குறித்து சமந்தாவின் டிசைனர்.

0
48861
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. சமீப காலமாக இவர்களின் விவகாரத்து குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று அதிகார பூர்வமாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் முடிவு சினிமா பிரபங்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இவர்களுக்கு சமரசம் பேசிய அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

-விளம்பரம்-
samantha-stylist-preetham-jukalker-says-naga-chaitanya-could-have-put-an-end-to-rumours

மேலும், இவர்களுடைய பிரிவு துரதிஷ்டவசமானது என்று நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவும் தெரிவித்திருந்தார். இவர்களுடைய பிரிவு குறித்து காரணங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் தன் பக்கத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் தான் என ரசிகர்கள் பலரும் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர்.

- Advertisement -

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரீத்தம் ஜுகல்கர் கூறி இருப்பது, இவ்வளவு நடந்தும் நாக சைதன்யாவின் அமைதி எனக்கு கவலையளிக்கிறது. சமந்தா எனக்கு சகோதரி போன்றவர். நான் அவரை எப்போதுமே ஜிஜி என்று தான் அழைப்பேன். இது அனைவருக்குமே தெரியும். எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேச முடியும்? மேலும், எனக்கு நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையே உள்ள உறவு முறை என்னவென்று அவருக்கும் தெரியும்.

Chay Sam Divorce Reason Preetham Jukalker Insta Post 'Hug You Like There Is  No Tomorrow'?

என்னையும், சாமையும் பற்றி யாரும் அப்படி பேச வேண்டாம் என்று நாக சைதன்யா வாய் திறந்து பேசி இருக்கலாம். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியீட்டு இருந்தால் கூட அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். சிலர் ரசிகர் என்ற பெயரில் தவறான தகவல்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து இனிமேல் இந்தமாதிரி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement