தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.

இது நாம் அனைவரும் பட்டு ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரை எடுத்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் சுபம் படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சமந்தா அவர்கள் பங்காரம் என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவே நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Bramhand – The Bloody Kingdom என்ற வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா பேட்டி:
இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து சமந்தா படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார். தற்போது சமந்தா ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு சமந்தா சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் கசிந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சமந்தா, நான் வரும் காலத்தில் பட தயாரிப்பு, பிசினஸ் என்று முழு கவனம் செலுத்த இருக்கிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று யோசிக்கிறேன், பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
சினிமா விட்டு விலகல்:
இப்படி சமந்தா சொல்லி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா காதல் கிசுகிசு:
மேலும், சில மாதங்களாக சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்த்து செல்வது, இருவரும் ஒன்றாக அமர்ந்து இருப்பது புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு சமந்தா தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டல் ஒன்றில் சமந்தா டின்னர் டேட்டிங் சென்று இருந்தார். டின்னர் முடிந்த பிறகு இருவருமே ஒன்றாக ஒரே காலில் வந்திருந்தார்கள்.






