தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை.
திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் தற்போது ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணமே இவர் நாகர்ஜுனா வீட்டின் மருமகள் ஆன பின்னர் தான்.
நாகர்ஜுனா மூலம் தான் தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்காலிகமாக தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைத்துள்ளது. சமீபத்தில் சமந்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில், எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான ஒரு அனுபவம். பிக்பாஸ் மேடையில் நான் தொகுப்பாளராக இருப்பேன் என்பதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்படி ஒரு பொறுப்பை கொடுத்து என்னுடைய மாமனார் தான் என்னுடைய பயத்தில் இருந்து வெளியேற ஒரு பலம் கிடைத்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எந்த அனுபவமும் இல்லை. அதேபோல தெலுங்கு பேசுவது குறித்தும் பயமாக இருந்தது.
இதுவரை ஒரு எபிசோடை கூட பார்த்ததில்லை. ஆனால், மூன்று நாடுகளில் தான் போல அனைத்து எபிசோடையும் பார்த்து விட்டேன் என்று கூறி இருந்தார் சமந்தா. சமந்தாவின் இந்த பதிவை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர், ஒரு எபிசோடு கூட இதற்கு முன்னால் பார்க்கவில்லையா என்று கமன்ட் செய்து சிரித்தார். அதற்கு பதிலளித்த சமந்தா மூன்று நாட்களுக்கு முன்னால் அனைத்து எபிசோடும் பார்த்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல மற்றொரு ரசிகர் காதில் இயர் பட்சை மாட்டிக்கொண்டு சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லி நன்றாக சமாளிக்கிறீர்கள் என்று கேலி செய்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, அது ஒன்றும் ஈஸி கிடையாது. பக்கம் பக்கமாக வசனத்தை நான் மனப்பாடம் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.