சர்ச்சைகளால் எகிறி மார்க்கெட் – சம்பளத்தை உயர்த்திய சமந்தா. நயனுக்கு அப்புறம் இவங்களுக்கு தான் அதிகம்.

0
404
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
samantha

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமந்தா அவர்கள் தற்போது பல புதிய படங்களில் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்காக இவர் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இவர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவை தவிர சமந்தா இந்தி படங்கள் என பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

samantha

மேலும், இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை சம்பாதித்து தந்தது. இதில் ஈழப்போராளியாக ஆக்ரோஷமான நடிப்பை சமந்தா வெளிப்படுத்தினார். இந்த தொடரின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சமந்தா பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நயன்தாராவுக்கு அடுத்து தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement