மயோசிடிஸ்படுத்தும் பாடு, IV Nutritional Therapy எடுத்துக்கொண்ட சமந்தா. அவரே சொன்ன காரணம்.

0
1513
Samantha
- Advertisement -

மயோசிடிஸ் நோய்க்காக எடுத்து வரும் புதிய சிகிச்சை குறித்து சமந்தா பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. அதிலும் குறிப்பாக இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-
Samantha

ஆனால், சமீபத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று சமந்தாவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

- Advertisement -

மயோசிடிஸ் நோய்:

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா:

தற்போது சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு மன நிம்மதிக்காக சமந்தா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அமெரிக்காவில் தன்னுடைய சிகிச்சையை தொடர்ந்து சமந்தா தற்போது தேறி இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தாகள். இந்த நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதாவது, சமந்தா அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள தோல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இது தொடர்பாக தான் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் மருத்துவர்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். மேலும், இந்த சிகிச்சையின் பலன் குறித்து பதிவிட்டு இருக்கும் அவர்’இது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மையோசைடிஸ் அம்பாஸிடர் :

தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய அமைப்பு சரியாக செயல்பட வைக்கிறது மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவை பார்த்த பலரும் அவர் விரைவில் குணமடைய தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சமந்தா அவர்கள் மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement