ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்ன ரசிகர்.! அதற்கு சிம்புவை கலாய்த்த பாலாஜி.!

0
414
Rj-Balaji

ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கி பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது ‘எல்.கே.ஜி.’ என்ற படத்தின்மூலம்  நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார்

ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நேற்று (பிப்ரவரி 22) வெளியாகி இருந்தது. வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டியுள்ளார் பாலாஜி.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்த அரசியல் நிகழ்வுகளையும், தற்போதுள்ள மீடியாவின் முகத்திரையையும் இந்த படத்தில் மிகவும் தைரியமாக காண்பித்துள்ளனர் பட குழுவினர். இதனால். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் மூலம் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர்களும் உருவாகியுள்ள நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பாலாஜியிடம், உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பாலாஜி, பாலை மறந்துடாதீங்க என்று கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சிம்பு பாலாபிஷேக சர்ச்சையில் சிக்கியது நம் அனைவரருக்கும் தெரியும். இந்த நிலையில் பாலாஜி சிம்புவை தான் கிண்டலடித்துள்ளார் என்று அனைவரும் புரிந்துகொண்ட கமன்ட்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

Advertisement