ஸ்கூல்ல நான் கத்துகிட்ட முதல் பாடம் இதான் – சமந்தாவை சூசகமாக கலாய்த்து முன்னாள் காதலர் சித்தார்த் போட்ட பதிவ பாருங்க.

0
89710
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவகாரத்து பெற இருப்பதாக நேற்று அறிவித்து இருந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர்.ஆனால், என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. அதுமட்டும் இல்லாமல் இவர்களின் 4வது திருமணம் நாள் கொண்டாடபட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் முன்னாள் காதலரான சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள்  ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் சமந்தாவை தான் சித்தார்த் சூசகமாக குறிப்பிடுகிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஜீவனாம்சமாக இத்தனை கோடி கொடுக்க முன் வந்தும் அதனை மறுத்து சமந்தா சொன்ன பதில்.

- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து ‘ஜபர்தஸ்த்’ எனும் டோலிவுட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்தும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. பின் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நடிகை சமந்தா காதலுக்கு குட்பை சொல்லி இருந்தார்.

மேலும், சமந்தாவை பிரிந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட பலர் சமந்தாவை தான் மறைமுகமாக கூறுகிறார் என்று கருதினர்.

-விளம்பரம்-

இதுகுறித்து ஜில் ஜங் ஜக் பட விழாவின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட போது ‘தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு டுவிட் செய்யவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் நினைத்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்’ என சித்தார்த் விளக்கமளித்தார்.’என்று கூறி இருந்தார் சித்தார்த்.

Advertisement