ஜீவனாம்சமாக இத்தனை கோடி கொடுக்க முன் வந்தும் அதனை மறுத்து சமந்தா சொன்ன பதில்.

0
30803
samantha
- Advertisement -

நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் இன்று முடிவுக்கு வந்து உள்ளது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : தன் தம்பியின் திரைப்படத்தை பார்க்க தன் மகனுடன் வந்த ஷாலினி – சரியான ப்ரோமோஷன் மாட்டிக்கிச்சே.

- Advertisement -

ஆனால், என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. அதுமட்டும் இல்லாமல் இவர்களின் 4வது திருமணம் நாள் கொண்டாடபட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் சம்பந்தா தன் பெயரில் வாங்கிய வீட்டில் தான் திருமணத்திற்கு பிறகு இருவரும் குடியேறினார்கள். ஆனால், கடந்த லாக் டவுன் நாட்களில் இருந்தே நாகசைதன்யா இந்த வீட்டில் இருந்து பிரிந்து தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

பின் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல வகையிலும் முயற்சி செய்து தோல்வி விட்டதாகவும் குடும்பத்தினர் கூறி இருந்தனர். தற்போது ஜீவனாம்சம் குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாகர்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜீவானந்தம் தருவதாக கூறி இருந்தார்கள். ஆனால், நான் நன்றாக சம்பாதிக்கிறேன் எனக்கு எந்தவித பண உதவியும் தேவையில்லை என்று சமந்தா சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரின் விவகாரத்து வழக்கு கூடிய விரைவில் நீதிமன்றத்திற்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement