ஊ சொல்றியா பாடலுக்கு குடும்பத்தார் கொடுத்த எதிர்ப்பு- முதன் முறையாக மனம் திறந்த சமந்தா

0
405
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

அதோடு இவர்களுடைய பிரிவிற்கு முக்கிய காரணம் ஊ சொல்றியா என்ற பாடல் என்று பலருமே கூறியிருந்தார்கள். அந்த படத்தில் சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடி இருந்தார். இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியதால் தான் நாக சைதன்யா- சமந்தா இடையே பிரச்சனை முற்றி பூகம்பமாக வெடித்தது. அதற்கு பிறகுதான் இருவருமே பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.

சமந்தா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா, ஊ சொல்றியா பாடலுக்கு பலருமே நடனமாட வேண்டாம் என்று எனக்கு அறிவுரை சொல்லி இருந்தார்கள். நான் விவாகரத்து அறிவித்த சமயத்தில் தான் அந்த பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க வேண்டாம் என்று என்னுடைய குடும்பத்தார், நண்பர்கள் எல்லோருமே சொன்னார்கள். ஆனால், திருமண வாழ்க்கையில் 100 சதவீதத்தை நான் சரியாக கொடுத்தும் பயனளிக்கவில்லை.

-விளம்பரம்-

விவாகரத்து பற்றி சொன்னது:

விவாகரத்தையும், ஊ சொல்றியா பாடலில் நடிப்பதையும் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும். இந்த கேள்வியை நான் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். என்னுடைய விவாகரத்துக்கும் அந்த பாடலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சமந்தா பிரிவிற்கு பின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

சமந்தா திரைப்பயணம்:

இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருந்ததால் இவர் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் சமந்தா. தற்போது இவர் பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement