‘ஊ சொல்றியா மாமா’ – பாடலில் ஆடியது குறித்து முதன் முறையாக மனம் திறந்த சமந்தா. வீடியோ இதோ.

0
1234
samantha
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is samantha-poushpa12122021m.jpg

விவாகரத்துக்கு பின் சமந்தா :

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது சமந்தா நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

ஒன்ஸ் மோர் கேட்கும் ரசிகர்கள் :

எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சமந்தாவின் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம், இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த சமந்தா ‘இது மிகவும் சவாலாக இருந்தது. அந்த பாடலின் ரிதத்தை புரிந்து கொண்டு சரியாக நடனமாட வேண்டும். அதுவும் அல்லு அர்ஜூனுடன் நடனமாட வேண்டும் என்பது எல்லாம் மே காட் என்ற அளவிற்கு இருந்தது’ என்று சமந்தா கூறியுள்ளார்.

Advertisement