சத்குரு சர்ச்சைக்கு மத்தியில் ஈஷா மையத்தில் இருந்து புகைப்படத்துடன் சமந்தா போட்ட பதிவு

0
186
- Advertisement -

சத்குரு சர்ச்சைக்கு மத்தியில் நடிகை சமந்தா போட்ட பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்குருவிற்கும் ஈஷா மையத்திற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை ஆன்மீக சொற்பொழிவாளரான இவர் ஈஷா யோகா சிவன் சிலை மூலம் பெரும் பிரபலமடைந்தார். ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கே சிவ ராத்திரி பூஜை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சத்குருவிற்கு சாமானிய மக்களை போல சினிமாவில் பல நடிகர் நடிகைகளும் பக்தர்கள் தான். மேலும்,
சத்குரு அவர்கள் ஈஷா யோகா மையம் திறக்கப்பட்ட போதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்து தான் இந்த ஈஷா யோகா மையம் கட்டப்பட்டதாக பல எதிர்ப்புகள் எழுந்தது. அதோடு மையத்திற்குள் பல பேரை அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல செய்திகள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

ஈஷா மையம் சர்ச்சை:

இது தொடர்பாக அளித்த பேட்டியில் சத்குரு, யார் யாரெல்லாம் எப்படிப் புகார் சொன்னாலும் அவர்கள் அனைவரையும் அழைத்தேன். ஆனால், ஒருவர் கூட வரவில்லை. ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக இப்படிப் பேசுகிறார்கள். ஆசிரமத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள் தேவைப்பட்டால் வனத் துறை அதிகாரியை கூட அழைத்து வாருங்கள். வனத்துறைக்கு சொந்தமான இடத்தையோ அல்லது வேறு யாருடைய நிலத்தையாவது ஒரு அங்குலமாவது நான் ஆக்கிரமித்து இருந்தால் தமிழகத்தை மட்டுமில்லை நாட்டை விட்டு சென்று விடுகிறேன் என்று கூறி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

இதை அடுத்து ஈஷா மையத்தில் 150 பேர் போலீசார் குழு விசாரணை நடத்துவதற்காக சில தினங்களுக்கு முன்பு அறக்கட்டளைக்குள் நுழைந்தது. இவர்கள் இப்படி அறக்கட்டளைக்குள் நுழைந்ததற்கு காரணம், அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்தது. இதனால்தான் இவர்கள் ஈஷா அறைக்கட்டளையில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமந்தா பதிவு:

மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஈஷா மையத்திலிருந்து நடிகை சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சில காளை மாடுகள் மைதானத்தில் ஓய்வெடுப்பது போல புகைப்படத்தை பகிர்ந்து, வீட்டுக்கு வெளியே இருக்கும் வீடு. அதாவது தன்னுடைய மற்றொரு வீடு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நாக சைதன்யா- சமந்தா சர்ச்சை:

ஏற்கனவே நாக சைதன்யா- சமந்தா விவாகரத்திற்கு KT ராமா ராவ் தான் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் சுரேகா பேட்டி அளித்து இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் நாகார்ஜுனா டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். இதை அடுத்து பிரபலங்கள் பலருமே அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள். மேலும், இது தொடர்பாக நடிகை சமந்தா, நாக சைதன்யா கூட பதிவு போட்டு இருந்தார்கள். அதன் பின் சுரேகா அவர்கள் சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு டீவ்ட் போட்டிருந்தார்.

Advertisement