Myositis என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, இது தான் அவரின் தற்போதைய நிலை – அவரே வெளியிட்ட பதிவு

0
450
samantha
- Advertisement -

Myositis என்ற நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

மேலும், சாகுந்தலம் படம் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சமந்தாவின் யசோதா பட ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

யசோதா படம் குறித்த தகவல்:

மேலும், வாடகைக்கு தாய் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் பேன் இந்தியா படமாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

சமந்தாவுக்கு பாதிக்கப்பட்ட நோய்:

இந்நிலையில் திடீரென நடிகை சமந்தா தன்னுடைய சோசியல் மீடியாவில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கு Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து குணமடைய எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. ஆனால், கூடிய விரைவில் நான் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று யசோதா படத்திற்கு ட்ரிப்ஸ் ஏற்றி கொண்டே டப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.Myositis எனப்படும் நோய் உள்ளவர்கள் தசைகளில் அதிக வலிகளை உணருவார்கள்.

Advertisement