நாங்கள் வளர்ந்து வேறு வேறு பாதைகளில் சென்று விட்டோம் – தனது சகோதரர்களுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா.

0
4536
Samantha
- Advertisement -

தமிழ், தெலுங்கு இரு மொழி படங்களிலும் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தனது நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் சின்ன வயசு ஃபோட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் 24 மணிநேரமும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

- Advertisement -

பிரபலங்கள் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என பல வேலைகளை செய்து தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சின்ன வயது புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

சமந்தாவின் திருமண புகைப்படம்

அதில் சமந்தா தனது அம்மா, அண்ணன்களுடன் இருக்கும் ஃபோட்டோ. அதில் அவர் கூறியது, நாங்கள் வளர்ந்து வேறு வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால், நம்முடைய வேர் ஒன்று தான். மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்படி சமந்தா பதிவிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement