நடிகை சமந்தா, ரசிகரின் ப்ரோபோசளுக்கு ரியாக்ட் செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே நடிகர் சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தெனிந்த சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் இருந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் என்று பலருமே கூறி இருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடி இருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:
இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். நாக சைதன்யா, வைரத்தை (சமந்தா) தொலைத்து, தங்கத்தை (சோபிதா) தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ரசிகரின் லவ் ப்ரோபோசல்:
தற்போது ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சமந்தாவை நேரில் பார்த்து, நீங்கள் எதற்கும் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று சொல்ல கிளம்பி விட்டேன் என்றவாறு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், அந்த ரசிகர் சமந்தாவின் வீட்டில் உள்ள ஜிம்மில் சமந்தாவை பார்த்து, உங்களுக்காக நான் எப்போதும் இருக்கிறேன். நீங்களும் நானும் கண்டிப்பாக ஒரு சிறந்த ஜோடியாக இருப்போம். நீங்க ஓகே சொன்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.
சமந்தாவின் பதில் :
எனக்கு ஒரு இரண்டு வருடங்கள் மட்டும் டைம் கொடுங்க. அதுக்குள் நான் சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நின்றபின் மீண்டும் உங்களை வந்து பார்க்கிறேன், ப்ளீஸ் மேரி மீ, ப்ளீஸ் மேரி மீ என்று கெஞ்சுமாறு பதிவிட்டுள்ளார். இந்த ரசிகரின் வீடியோவை பார்த்த நடிகை சமந்தா, உங்கள் பின்னணியில் உள்ள ஜிம் பேக்ரவுண்ட் என்னை உங்களை நம்ப வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ரசிகரின் செயல்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.