‘கடைசில தனியா வாழ்ந்து நாய் கூட தான் சாகப்போற’- நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு சமந்தா பதிலடி. பதிவையே நீக்கிய நபர்.

0
569
samantha
- Advertisement -

தனது நாயுடன் ஒப்பிட்டு கமன்ட் போட்டவருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் நடித்து வந்தார். அதோடு இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் பாருங்க : விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள இமானின் முன்னாள் மனைவி மோனிகா ?

- Advertisement -

விவாகரத்துக்கு பின் சமந்தா :

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இருந்தும் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருப்பினும் சமந்தா தான் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

சமந்தாவின் எச்சரிக்கை பதிவு :

இதனால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா விவகாரத்து அறிவிற்கு பின்னர் ஆண்மீக சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”’என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள். என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்’ அதே போல அந்த பதிவை குறிப்பிட்டு  “கருணைக்கு expiry date இருக்கலாம்” என குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

சமந்தாவின் செல்லப்பிராணிகள் :

இப்படி ஒரு நிலையில் சமந்தா தனது செல்லப்பிராணியுடன் பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்டுக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். நடிகை சமந்தா செல்லப்பிராணிகள் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தன் வீட்டிலேயே நாய் பூனை என்று பல செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் தனது செல்லப்பிராணிகளுடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமந்தா கொடுத்த பதிலடி :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சமந்தா தனது நாயுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் ‘இறுதியில் இவர் தன்னந்தனியாக நாய் மற்றும் பூனையுடன் தான் சாகப்போகிறார்’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சமந்தா ‘அதை நான் என்னுடைய அதிர்சடமாகவே கருதுவேன்’ என்று பதிலடி கொடுக்க கமன்ட் போட்ட நபர் தன் பதிவையே நீக்கிவிட்டார்.

Advertisement