தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாககடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்த பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சமந்தா நடிக்கும் படங்கள்:
அதிலும் பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து இவர் விஜய் தேவர்கொண்டா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தமாகி உள்ளார். பின் இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.
சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் படம்:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா,நயன்தாரா நடித்து இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர், பாடல் எல்லாம் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. அதை தொடர்ந்து சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் சமந்தா:
இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வந்தாலும் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடுவது என சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சினிமா கேரியரை குறித்தும் சோசியல் மீடியாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில்,
உங்களுடைய முதல் சம்பளம் குறித்து கூறுங்கள்:
என்னுடைய முதல் வருமானம் 500 ரூபாய். ஒரு ஓட்டலில் 8 மணி நேரம் hostess ஆக வேலை பார்த்தேன். அப்போது நான் பத்தாவது அல்லது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
கண்மணி or கதீஜா குறித்து சொல்லுங்கள்:
கதீஜா இல்லை என்றால் கண்மணி இல்லை, கண்மணி இல்லாமல் கதீஜா இல்லை என்று சமந்தா கூறினார்.
இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்பவர்கள் குறித்துக் கூறுங்கள்:
இன்ஸ்டாவில் 23 மில்லியன்ஸ் பின்தொடர்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோஷமான இருக்கிறது. இது என்னுடைய அதிஷ்டமும் கூட. ரசிகர்களுக்கும், என்னை பின் தொடர்பவர்களுக்கும் ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.
டாட்டூ குறித்து உங்களுடைய சிந்தனை கூறுங்கள்:
ஒருபோதும் டாட்டூ வேண்டாம் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார்.