சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார்.
இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸை ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா திருமணம்:
இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவர், பெண் விவாகரத்து பற்றி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

சமந்தா காதல் கிசுகிசு:
மேலும், சில மாதங்களாக சமந்தாவின் காதல் கிசுகிசு குறித்த செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்த்தபடி செல்வது, பேசுவது, ஒன்றாக அமர்ந்து இருப்பது என்று இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். இதற்கு முன்பே நடிகை சமந்தா நடிகர் ராகுல் ரவீந்திரனுடன் கைகோர்த்தபடி ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில், If I lose my shit, promise not to laugh / If I throw a fit and get photographed / Would you take my side? Would you hold my hand?" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு என் கைகளை இறுகப்பற்றிக் கொள்வாயா? அவர்கள் பொய் சொன்னால் என்னை திரும்ப அனுப்பிவிடாதே என்று அர்த்தம். இது பிரபல பாப் பாடகர் பாடிய ஹாலிவுட் படத்தினுடைய வரிகள். இதை பார்த்த ரசிகர்கள், மீண்டும் சமந்தா காதலில் விழுந்தாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.






