தன் தம்பியின் திரைப்படத்தை பார்க்க தன் மகனுடன் வந்த ஷாலினி – சரியான ப்ரோமோஷன் மாட்டிக்கிச்சே.

0
12939
shalini
- Advertisement -

திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் நேற்று தமிழ் திரை உலகிற்கு வெளியான படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளார்கள். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம். மேலும், ருத்ர தாண்டவம் படம் குறித்து ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
மகனுடன் ஷாலினி அஜித்

இந்த நிலையில் நடிகை ஷாலினி அவர்கள் ருத்ரதாண்டவம் படம் குறித்து படக்குழுவினரிடம் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித்குமார். அஜித்குமார் மனைவி தான் ஷாலினி. ஷாலினி ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ‘நடக்காமல் போன பாலு மகேந்திரா படம்’ களவாணி படத்தின் விமல் தங்கையை ஞாபகம் இருக்கா ?

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு ஷாலினி அவர்கள் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டார். மேலும், அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் அண்ணன் தான் ருத்ர தாண்டவம் படத்தின் கதாநாயகன் ரீச்சர்ட். இந்நிலையில் ஷாலினி அவர்கள் தனது அண்ணன் நடித்த ருத்ர தாண்டவம் படத்தை பார்த்து படக்குழுவினருக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோவை இயக்குனர் மோகன் ஜி அவர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இருவேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒன்று ஷாலினி ஜாதி மதம் பற்றிய படத்திற்கு ஆதரவு தருகிறாரா? என்றும், இன்னொரு பக்கம் ஷாலினி நல்ல படத்திற்கு ஆதரவு தருவதில் எந்த தவறு என்றும் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement