விவாகரத்து பின் என்னை காப்பற்றியது இந்த இருவர் தான் – மேடையில் கலங்கிய சமந்தா. வைரல் வீடியோ இதோ.

0
738
samantha
- Advertisement -

‘என்னை காப்பாற்றியது அவர்கள் தான்’ என்று சமந்தா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
May be an image of 1 person and standing

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

- Advertisement -

சமந்தா ஆன்மீக சுற்றுலா:

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

May be an image of 1 person and standing

புஸ்பா படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் சமந்தா அவர்கள் ‘ஊ சொல்லிறியா’ என்ற பாடலுக்கு பயங்கரமாக நடனம் ஆடி இருந்தார். மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது.

-விளம்பரம்-

சமந்தாவின் ஊ சொல்லிறியா பாடல்:

மேலும், எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கியது. இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் கூறியது, உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போது தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள் தான். அவர்கள் துணையில் தான் நான் அதிலிருந்து விடுபட்டேன்.

சமந்தா அளித்த பேட்டி:

அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம் என்று பேசி இருந்தார். இப்படி சமந்தா பேசிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமந்தா மன அழுத்தத்திலிருந்ததற்கு அவருடைய விவாகரத்து தான் காரணம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement