சமந்தாவிற்கு தோல் பிரச்னைக்காக அமெரிக்காவில் ஒரு மாதம் சிகிச்சை ? – என்ன ஆச்சி ?

0
318
- Advertisement -

தோல் பிரச்சினைக்காக அமெரிக்காவில் சமந்தா சிகிச்சை பெற்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

samantha

சமந்தா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.

-விளம்பரம்-

சிகிக்சை பெற்ற சமந்தா:

ஆனால், அதன் பணிகள் இன்னும் முடியாத காரணத்தினால் இந்த படம் வெளியீடு தாமதமாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், சாகுந்தலம் படம் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தோல் பிரச்சினைக்காக அமெரிக்காவில் சமந்தா சிகிச்சை பெற்ற தகவல் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் சமந்தா அவர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். தன்னுடைய தோல் பிரச்சனைக்காக சமந்தா அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கி இருந்து சிகிச்சை பெற்றதாக சமந்தாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருக்கின்றனர்.

Samantha

சமந்தாவின் தற்போதைய நிலை:

ஆனால், சமந்தாவிற்கு தோலில் எந்த மாதிரியான பிரச்சனை என்ற தகவல் தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு சரும பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய தோல் பிரச்சினைகளிலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். மீண்டும் கூடிய விரைவில் சமந்த படபிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சமந்தா புது படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அதற்கு தேவையான உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும் சமந்தா உறுதியாக இருக்கிறார்.

Advertisement