மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பிரபல நடிகை..! இப்படி ஒரு நிலைமையா..? வைரலாகும் புகைப்படம்.!

0
295
Samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் மார்க்கெட்டில் கைகறி விற்பது போல ஒரு புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த புகைப்படம் ஏதோ படப்பிடிப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தான் பலரும் நினைத்து வந்தனர்.

Actress samantha

ஆனால், உண்மையாகவே நடிகை சமந்தா ஒரு நல்ல காரியத்திற்காக மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். திரைப்படங்களை தவிர நடிகை சமந்தா “பிரதியுஷா” அரக்கட்டைகளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கஷ்டத்தால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பணம் திரட்டுவதற்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி கடை ஒன்றை போட்டு காய்கறிகளை விற்றுள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா காய் கறிகளை விற்றதால் அவர் சொன்ன விலைக்கு காய்கறிகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். காய் கறிகளை விற்று கிடைத்த அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு அளித்திருக்கிறார் நடிகை சமந்தா.பிரபலமான நடிகையாக இருந்தும் ஏழை மக்களுக்காக சமந்தா செய்த இந்த செயல் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுவருகிறது.