அவர் தான் காரணம், அவரால அது முடியல – தற்போதும் தொடர்ந்து நாக சைதன்யாவை டேமேஜ் செய்யும் சமந்தா.

0
480
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து இருக்கிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-
samantha

இதனால் சமந்தா மனம் உடைந்து போய் விட்டார். இதை அடுத்து கடைசியாக இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி இருந்த குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சிகிச்சையில் சமந்தா:

இன்னொரு பக்கம் கடந்த சில வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. கடந்த வருடம் அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை சமந்தா திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

சினிமாவை விட்டு விலகிய சமந்தா:

அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருக்கிறார். தற்போது இவர் சிகிச்சை, மன நிம்மதி என்று இருக்கிறார். இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் இவர் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா ரசிகர்களுடன் உரையாடி இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி:

அப்போது ரசிகர் ஒருவர், தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக மாற்ற விரும்பினால் ப்ளூப்பராக நீங்கள் என்ன சிரிப்பீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன? என்று கேட்டு இருந்தார்கள். அதற்கு சமந்தா, என்னுடைய விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருப்பது என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அப்போது எனக்கு இருந்த துணையால் விருப்பு வெறுப்புகள் என்னை மறைமுகமாக பாதித்தது.

Samantha

சமந்தா பதில்:

ரொம்ப கஷ்டமான நேரத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்த தருணத்தில் நான் தனிப்பட்ட வளர்ச்சியை பெற்றேன் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார். இவர் மறைமுகமாக தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவை தான் கூறியிருக்கிறார். சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement