‘நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர்’ இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன தெரியுமா?

0
204
samantha
- Advertisement -

நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து நடிகை சமந்தா பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்கள். இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

டாப் நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா :

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த காத்துவாக்குல 2 காதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மோடி குறித்து சமந்தா பேசிய வீடியோ :

அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், யசோதா, குஷி, ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் சமந்தா மோடி குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வீடியோவின் பின்னணி என்ன :

அந்த வீடியோவில் ‘நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார்’ என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பலரும் சமந்தா பா.ஜ.க ஆதரவாளரா ? என்று வியப்புடன் தங்கள் வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வைரல் செய்துவருகின்றனர்.

7 ஆண்டுகளுக்கு முன் பேசிய வீடியோ :

ஆனால், உண்மையில் சமந்தாவின் இந்த வீடியோ 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’, ‘FIT INDIA’, போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்திய போது பல பிரபலங்கள் தெருவில் இறங்கிக் குப்பைகளை சுத்தம் செய்து, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.அந்தச் சமயங்களில் நடிகை சமந்தாவும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஆதரித்து குப்பைகளை சுத்தம் செய்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அந்த சூழலில் தான் சமந்தா மோடி குறித்த கேள்விக்கு இப்படி பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement