‘என் அமைதியை தப்பா புரிஞ்சிக்காதீங்க’ – சமந்தா போட்ட எச்சரிக்கை பதிவு. காஜல் குழந்தை பெற்றதுடன் ஒப்பிட்டு போட்ட இந்த மீம் தான் காரணமா ?

0
493
samantha
- Advertisement -

சமீபத்தில் சமந்தா போட்டுள்ள கோபமான வரிகள் அடங்கிய பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
samantha

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் நடித்து வந்தார். அதோடு இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தாவின் கோபமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வளைதள பக்கத்தில் எச்சரிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள். என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்’ அதே போல அந்த பதிவை குறிப்பிட்டு  “கருணைக்கு expiry date இருக்கலாம்” என குறிப்பிட்டு இருக்கிறார். 

காஜலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா :

சமந்தாவின் இந்த கோபமான பதிவிற்கு முக்கிய காரணம் காஜல் அகர்வாலுடன் இணைத்து வெளியான மீம் தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது இதற்க்கு சமந்தா வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு காஜல் நன்றி ஆண்டி என்று பதில் கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் குழந்தை பெற்றுக்கொண்டதையும் சமந்தாவையும் ஒப்பிட்டு சிலர் மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தனர்.

-விளம்பரம்-

அந்த மீம் தான் காரணமா :

அதில் ‘நீங்க சூப்பர் மேடம் கரெக்ட்டா கல்யாணம் பண்ணீங்க புள்ளையா பெத்தீங்க உங்க கணவர் ரொம்ப கொடுத்து வச்சவர்’ என்று அதில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மீமை பகிர்ந்து பலரும் சமந்தாவை கேலி செயதனர். இப்படி ஒரு நிலையில் இந்த மீமை கண்டு தான் சமந்தா இப்படி பதிவை போட்டுள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்துகொள்வதாக வந்த செய்தியை குறிப்பிட்டு தான் சமந்தா இந்த பதிவை போட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

இரண்டாம் திருமணம் குறித்து நாக சைத்னயா :

ஆனால், தனது இரண்டாம் திருமண வதந்தி குறித்து சமீபத்தில் பேசிய நாக சைத்னயா, நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது வருத்தத்தை அளிப்பதாகவும் தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement