Myositis படுத்தும் பாடு, IVIG ஊசி, பழனியின் படிக்கட்டு வேண்டுதல் – போராடி வரும் சமந்தா.

0
358
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.சமீப காலமாக தெலுகு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

-விளம்பரம்-

அதற்காக சிகிச்சை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதற்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. டிகை சமந்தா உடல்நிலை சரியில்லாத போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்த வருகிறார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால், அந்த வலியுடன் தான் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார் சமந்தா. அப்போது வெளியான புகைப்படங்களை கண்டு சமந்தாவின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்.இந்த நிலையில் யசோதா திரைப்படத்திற்கு பின்னர் நடிகை சமந்தா சகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

மிகவும் புகழ் பெற்ற சகுந்தலை புராண கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ்ராஜ் மதுபாலா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது உடல்நலம் தேறிவரும் சமந்தா மீண்டும் உடற்பயிற்சில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தன்னுடைய பயிற்சியாளர் உடன் சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,வீட்டில் மயோசிடிஸ் சிகிச்சையை மேற்கொள்ளும் போது தனது நண்பர்கள் ராகுல் ரவீந்திரன் மற்றும் நந்து ரெட்டி ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.மேலும் அந்த பதிவில், மயோசிடிஸ் சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஆன்டிபாடிகளுக்கான IVIG ஊசிகளை எடுத்துக்கொள்வதாகவும், புதிய இயல்பான நிலை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனிடையே பழனி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு தன் உடல் நலம் குணமாக 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். தற்போது இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement