சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.
சமந்தா-நாக சைதன்யா பிரிவு:
ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.
சமந்தா நடித்த படங்கள்:
இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், சாகுந்தலம் படம் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தாவின் யசோதா பட ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.
யசோதா படம் குறித்த தகவல்:
இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாடகைக்கு தாய் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் பேன் இந்தியா படமாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
யசோதா படத்தின் டிரைலர்:
இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை சூர்யா தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு சமந்தாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.