அந்த விஷயம் ஏற்கனவே தெரியும் – சமந்தாவின் விவாகரத்து குறித்து அவரது பெற்றோர் உருக்கம்.

0
50482
samantha
- Advertisement -

தற்போது சோசியல் மீடியாவை ஓபன் பண்ணாலே போதும் நாக சைதன்யா–சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து தான் கொழுந்து விட்டு எரிகிறது. சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் இவர்களுடைய விவாகரத்து குறித்து தான் கருத்துக்களையும், கேள்விகளையும் கேட்டு கொண்டு வருகின்றனர். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சமந்தா–நாக சைதன்யா. இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடி என்றால் சமந்தா-நாகசைதன்யா தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் திகழ்ந்து வந்தார்கள்.

-விளம்பரம்-
Samantha about her parents in wedding | Samantha Clarifies the Rumors

பின் சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவரும் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சமந்தா– நாக சைதன்யா விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

தற்போது இவர் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, சமந்தா– நாக சைதன்யா விவாகரத்து விஷயத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இவர்களுடைய திருமண தகராறு குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும். இந்த நிலைமை சீராகி விடும் என்று நம்பினேன். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. இவர்களுக்கிடையே இருந்த பிரச்சினை நாட்கள் செல்லச் செல்ல முற்றிவிட்டது.

என் மகள் எந்த முடிவெடுத்தாலும் தெளிவாகத்தான் எடுப்பார். அதேபோல் இந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய முறை யோசித்து இருப்பார் என்று நான் நம்புகிறேன். என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே என்ன காரணத்தினால் இவர்கள் விவாகரத்து செய்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement