தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.
சமந்தாவின் முதல் ஐட்டம் பாடல் :
மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர்.
பாடலின் வரவேற்பும் சர்ச்சையும் :
எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
சமந்தா கொடுத்த விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா ‘நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன், சீரியஸாகவும் நடித்திருக்கிறேன், நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி’ என்று பதிவிட்டு இருந்தார்.
இணையத்தில் லீக்கான பாடல் :
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும்ம் இந்த பாடலின் அதிகாரபூர்வ வீடியோ எப்போது வெளியாகும் என்று சமந்தாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிரிபார்த்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த பாடலின் Hd வீடியோ சமூக வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.